Categories
தேசிய செய்திகள்

OMG: அடங்காத ஆத்திரம்…! பிஞ்சு குழந்தையின் காலை அடுப்பில் வைத்த….. கொடுரக்கார பேய் (தாய்)….!!!!!

கேரள மாநிலம் ஒசத்தியூரைச் சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான ரெஞ்சிதா கணவரை விட்டு பிரிந்து , கூலிக்கடவு மார்க்கெட் ரோட்டில் தனது காதலர் உன்னிகிருஷ்ணனுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். இவரது 4 வயது குழந்தையும் இவ்ர்களோடு ஒன்றாக இருந்துள்ளது. இந்நிலையில் இவரின் குழந்தை அங்கன்வாடி மையத்துக்கு செல்லாமல் விளையாடுவதில் ஆர்வம் காட்டியதால் ஆத்திரம் அடைந்த தாய் ரஞ்சிதா குழந்தையை அடித்துள்ளார். அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல் 4 வயது குழந்தையின் காலை அடுப்பில் வைத்துள்ளார். மேலும் அவரை மின்சார வயரைப் பயன்படுத்தியும் பலமாக அடித்துளார்.
இதில் குழந்தையின் கால் கடுமையாக சேதமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் தாக்குதலின் தீவிரத்தால் அவரது கால் பகுதியின் சதை உதிர்ந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த அந்த பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலிஸார் தாய் ரெஞ்சிதாவையும் அவரின் காதலர் உன்னிகிருஷ்ணனையும் கைது செய்தனர். பின்னர் குழந்தையிடம் போலிஸார் பேசியபோது உன்னிகிருஷ்ணன் தன்னை அடிக்கடி தாக்கியதாக குழந்தை கூறியுள்ளது.

Categories

Tech |