குடியிருப்பு வளாகத்தில் வீசப்பட்ட OFAB-500 என்ற குண்டை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பின் போது செர்னிஹிவ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் செர்னிஹிவ் அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து குண்டுகள் வீசப்பட்டது.
அதில் OFAB-500 என்கிற பிரமாண்ட குண்டுகளும் வீசப்பட்டது. குடியிருப்பு வளாகத்தில் வீசப்பட்ட ஒரு குண்டு வெடிக்காமல் இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த குண்டு பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் அங்கிருந்து எடுக்கப்பட்டு பின்னர் வெடிகுண்டு நிபுணர்களால் OFAB-500 குண்டு செயலிழக்க வைக்கப்பட்டது.