Categories
உலக செய்திகள்

OMG: அணுமின் நிலையத்துக்கு தீவைப்பு…. ரஷ்யாவின் பயங்கர தாக்குதல்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!!!

ரஷ்யா ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான சப்ரோசியா அணுமின் நிலையத்தின் மீது குண்டுகளை வீசி இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். தற்போது வரை அணுமின் நிலையம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 9-வது நாளாக போர் புரிந்து வருகிறது. கார்கிவ் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றும் பட்சத்தில், கருங்கடலில் உக்ரைனின் ஆக்கிரமிப்பும், ராணுவத்தின் செயல்பாடுகளும் வெகுவாக குறுகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் ரஷ்யா, கார்கிவ் நகரத்தின் மீது தீவிரமான தாக்குதலை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பெலாரஸில் ரஷ்யா, உக்ரைன் அதிகாரிகளிடையே 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2-ம் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லாததால், 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நோக்கி நகரலாம் என தெரியவந்துள்ளது.

அணு மின் நிலையத்தை சுற்றிவளைத்து ரஷ்ய படைகள் நான்குப்புறமும் தாக்குதல் நடத்தியதால், அணுமின் நிலையத்தில் தீப்பிடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஒருவேளை இந்த அணுமின் நிலையம் வெடித்து சிதறினால் செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் டிமிட்ரோ குலேபா அச்சம் தெரிவித்துள்ளார். இருப்பினும், உக்ரைன் சார்பில் “சப்ரோசியா அணுமின் நிலையம், தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது” என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |