சினிமா துறையில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்து வரும் 100 பெண்களில் 90 சதவீத பெண்கள் தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்க படுகிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன் ME TOO விவகாரம் இந்த பிரச்சினையை இன்னும் பெரிதாகியது.
இந்த நிலையில் தற்போது அனைவரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பயில்வான் ரங்கநாதன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் “சினிமாவில் நடிக்க வரும் இளம் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படுக்கைக்கு அழைக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சினிமா துறையில் ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு நடந்து வரும் கொடுமை தற்போது ஆண்களுக்கும் அதிக அளவில் நடக்கின்றது. சினிமாவில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலர் ஆண்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்யச் சொல்லகிறாரகள். பின்பு அவர்களை ஏமாற்றி விடுவது வழக்கமாகி உள்ளது. அவர்களும் தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைத்து ஏமாந்து விடுகிறார்கள் என்று கூறிஉள்ளார்”.
இந்த நிலையில் சினிமா துறையில் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இது மாதிரியான கொடுமைகள் நடக்கின்றது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில் எதிர்காலத்தில் இந்த விஷயம் விவாதப் பொருளாக மாறும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.