பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது.
உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 10 கோடியை கடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும். மேலும் இதுவரை 11 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் தெரிவித்துள்ளது.