சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலம் மலர்ந்த காதலால், தற்போது பரிதவித்து நிற்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த சிறுமி ஒருவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருப்பாசூரை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவருக்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தொடர்ந்து பேசி வந்தனர். அந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த சிறுமி சமூக வலைத்தளம் மூலமாகவே அந்த மாணவனை காதலித்து வந்துள்ளார். முகநூலில் அறிமுகமான மூன்று நாட்களில் அந்தச் சிறுவனைத் தேடி திருவள்ளூர் சென்றுள்ளார் அந்த சிறுமி.
அப்போது அந்த சிறுவன் சிறுமியை தனியாக அழைத்து சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களோடு சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் அனைவரும் கவனமாக இருங்கள். இல்லையென்றால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்புடன் கவணிக்க வேண்டும்.