உங்கள் லேப்டாப் (அல்லது) ஸ்மார்ட் போனிலுள்ள தரவு பாதுகாப்பானது என நீங்கள் உணர்ந்தால் இது உங்கள் தவறான புரிதல் ஆகும். ஏனென்றால் ஒரு நிறுவனத்தைப் பற்றி வெளிவந்துள்ள தகவல் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இத்தகவலுக்குப் பிறகும் உங்களது ஸ்மார்ட்போன் (அல்லது) லேப்டாப் மற்றும் கணினியில் வைத்திருக்கும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பானவை என நீங்கள் நினைத்தால், மறுபரிசீலனை செய்தவது நல்லது ஆகும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களை ஹேக்செய்யும் ஸ்பைவேர் நிறுவனம் இதை ரகசியமாக செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்நிறுவனமானது மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறது. மேலும் அந்த நிறுவனம் நினைத்தால் எந்த ஒரு நபரின் ஸ்மார்ட் போன் மற்றும் கம்ப்யூட்டர், லேப்டாப்களை ஹேக்செய்ய முடியுமாம்.
ஹேக்செய்யும் நிறுவனம்
இன்டெல்லெக்சா எனும் ஸ்பைவேர் நிறுவனம் ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களை ஹேக் செய்கிறது. ஹேக் செய்தபின் அந்நிறுவனம் மக்களிடமிருந்து பெரிய தொகையை வசூலிக்கிறது. கேட்கும் தொகையை கொடுத்து விட்டால், அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை காப்பாற்றுகிறார்கள். இதில் 1 ஹேக்கிங் செய்வதற்கு மட்டும் அந்நிறுவனமானது 64 கோடியை வசூலிக்கிறதாம். அதற்கு ஏற்றார் போல் ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐபோன்களை அந்நிறுவனம் குறிவைப்பது இலக்காக வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக சினிமா மற்றும் மிகப் பெரிய தொழில் பிரபலங்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனமாக இருப்பது நல்லது.