Categories
தேசிய செய்திகள்

OMG: ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்….!!!!

ஆபாச பட விவகாரத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நமது இந்தியாவில் தற்போது அதிக அளவில் ஆபாச படங்கள் பகிரப்படுகிறது. இது குறித்து டெல்லி  சிறப்பு போலீசார் விசாரணை  செய்து வருகின்றனர் . இதற்கு அவர்கள் “மசூம்”  என பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையை  போலீசாரின் உளவுப்பிரிவும், அனைத்து மாவட்ட காவல்துறையும் இணைந்து நடத்தினர்.  இந்த ஆபாச படம் குறித்து பல்வேறு காவல் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. அதேபோல் இந்த சோதனையில் இதுவரை 36 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆபாச பட விவகாரத்தை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவை சேர்ந்த தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன்  தேசிய குற்ற ஆவண காப்பகம் புரித்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் இந்தியாவில்  ஆபாச படங்களை பகிர்பவர்கள், சமூக வலைதளங்களில் பதிவேற்றுபவர்கள் குறித்த தகவல்களை நிறுவனம் இந்தியாவிற்கு வழங்கும். அதனை வைத்து போலீசார் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள்  கூறியுள்ளனர்.

Categories

Tech |