Categories
உலக செய்திகள்

OMG: ஆறாக மாறும் பிரபல நாட்டின் சாலைகள்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இது குறித்து  வானிலை ஆய்வு மையம் கூறியதாவது. நாட்டின் சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மிட்லாண்ட்ஸ்  மற்றும்  கிழக்கு ஸ்காட்லாந்தின்  பெரும் பகுதி முழுவதும் பலத்த கனமழைக்கான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைப்பானது பிரித்தானியாவில் 24 வெள்ள அபாயங்களையும், 98 எச்சரிக்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை லண்டன் மற்றும் அதை சுற்றியுள்ள ரயில் சேவைகளில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது.

மேலும் தலைநகருக்கு செல்லும் ரயில்கள், ரயில்வே கிராசிங் தடையில்  லாரி ஒன்று மோதியை தொடர்ந்து தாமதமாக வந்துள்ளது. மேலும் நேற்றிரவு பெய்த கனமழையால் மேற்கு சசெக்ஸில்  A  27 இன்  ஒரு பகுதி ஆறாக மாறியதால் வெள்ளத்தில்  மூழ்கிய பாதையால் டசின் கணக்கான சாரதிகள் சிக்கி தவித்துள்ளனர். மேலும் சில சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்  ஏற்பட வாய்ப்புள்ளது. . அந்த எச்சரிக்கையின் கீழ் உள்ள பகுதிகளில் மக்கள் வெள்ள நீரில் ஊடாக பயணிப்பதை தவிர்க்குமாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையங்கள் வழியாக இயங்கும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படலாம். அடுத்த 40 நிமிடங்கள் வரை தாமதமாகலாம் அல்லது மறு அறிவிப்பு வரும் வரை இடையூறு ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |