சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்க கூடும் என்று ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன . இந்த நிலையில் ரஷ்யாவில் அமெரிக்காவின் பணப் பட்டுவாடா நிறுவனங்களான மாஸ்டர் கார்ட் மற்றும் விசா தங்களின் சேவையை நிறுத்தி உள்ளது. இதற்கிடையில் அமேசான், டிக்டாக், ஃபேஸ்புக் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான சோனி மியூசிக் என பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் டிடிமிட்ரி ரோகோசினின் மேற்கத்திய நாடுகள் எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் போட்டுள்ளதால் சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழக்க கூடும் என்று எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சேவை செய்யும் ரஷ்ய விண்வெளி கப்பல்கள் இந்த பொருளாதார தடைகளால் தங்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும். இதனால் விண்வெளி நிலையத்தில் சுற்றுப்பாதையை சரிசெய்ய உதவும் ரஷ்ய பிரிவு பாதிக்கப்படலாம். மேலும் கடல் அல்லது நிலத்தில் 500 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் விழுந்து விபத்துக்கு உள்ளாகும்” என்று கூறியுள்ளார்.