பொதுவாக பள்ளிக்கூடங்கள் எப்போதுமே குழந்தைகளின் ஏற்றாற்போல தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த உலகத்தில் மிகவும் வினோதமான அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான வழித்தடங்கள் இருக்கக்கூடிய 3 பள்ளிக்கூடங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்பொழுது பார்க்கப்போகிறோம். பங்களாதேஷில் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குழந்தைகளின் படிப்பு பாதிப்படைவதால் Boat House-ஐ பள்ளிக்கூடமாக மாற்றி வைத்துள்ளார்கள்.
இதில் இருக்கும் நன்மைகள் என்னவென்றால் எவ்வளவு தூரத்தில் குழந்தைகளை இருந்தாலும் அவர்களுக்கும் கல்வி எளிமையாக கிடைக்கிறது. அது மட்டுமின்றி சாதாரணமாக ஒரு பள்ளியில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதிலும் இருக்குதாம். நேபாளில் ஒரு பகுதியில் இருக்கக்கூடிய பள்ளிக்கு குழந்தைகள் தினமும் தங்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றை கடந்து தான் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். அதன்பிறகு கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் மலையில் நடந்து தான் பள்ளியை அடைவார்களாம். சீனாவின் மலைப்பகுதியில் ஒரு பள்ளிக்கூடம் 2500 அடி உயரத்தில் உள்ளதாம். இங்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல் 5 மணி நேரம் பயணித்து தான் பள்ளிக்கு செல்வார்களாம்.