Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவிற்கு வந்த ஏலியன்கள்?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

பஞ்சாப் மாநிலத்தில் வானில் அடையாளம் தெரியாத பொருள் போன்று ஏலியன்கள் பறந்து சென்றதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வானில் பறந்து சென்றது பொதுமக்களிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்தப் பொருளை வீடியோ எடுத்த பலர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது. பொதுவாக இது போன்ற பொருள் ஏதாவது வானில் பறந்து சென்றால் அதனை UFO என்று கூறுவார்கள். அது ஏலியன்கள் பயன்படுத்தும் வின்கலனை அப்படி கூறுவார்கள். இது இரவு 9 மணியளவில் மின்மினுக்கு பொருள் ஒன்று வானில் பறந்து சென்றதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.

அதனை பார்த்தவுடன் மக்கள் அனைவரும் அதே ஏழு எண்களின் காலமாக இருக்கலாம் என பேசத் தொடங்கினார். இதனை கையில் எடுத்துக்கொண்ட நெட்டிசன்கள் ஏலியன் தொடர்பான பேச்சுக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் நிஜமாகவே இருக்கின்றனவா என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஏலியன்கள் இருக்கிறது என்று தான் கூறி வருகிறார்கள். அந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

Categories

Tech |