உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பரவத் தொடங்கிய ஓமைக்ரான் வைரஸ் திடீரென புதிய வகையில் உருமாறி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஓமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் திடீரென்று பி ஏ 2 என்ற புதிய வகை வைரஸ் உருமாறி இருப்பதாகவும், இந்த உருமாறிய வைரஸ் மத்திய பிரதேச மாநிலத்தில் 21 பேரிடம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட 21 பேரில் 15 பேர் இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories