Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் ரயில் நிலையம் இல்லாத 132 மாவட்டங்கள்….. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரயில் நிலையங்கள் இல்லாத மாவட்டங்களை ரயில்வே வரைபடத்துடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நமது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏராளமான ரயில் நிலையங்கள் உள்ளது. ஆனால் சில மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் நிலையங்கள் இல்லை. இவற்றை  கண்டறிய இந்திய ரயில்வே பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜ்னா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் நிதி ஆயோக்  பரிந்துரைத்தது. அதன்படி நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவில் 132 மாவட்டங்களின் தலைநகரங்களில்  ரயில் நிலையங்கள் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. 132 மாவட்ட தலைநகரங்களில் ரயில் நிலையங்கள் இல்லை. அவற்றை இணைக்க முதல் கட்டமாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் நமது ரயில்வே நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதிகளுக்கு அருகில் உள்ள ரயில் பாதை கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் நிறைவடைந்தால் நமது நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 346 லிருந்து 7 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |