Categories
தேசிய செய்திகள்

OMG: இந்தியாவில் 27 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மத்திய சுகாதாரத்துறை….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக தொற்று குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்த நிலையில் 3-வது அலையாக உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மற்றும் கொரோனா நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெரும் தோற்றால் 284 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு 9,249 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், நாடு முழுவதும் 1,22,801 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதே போல் நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,525 -ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 460 பேருக்கும், தலைநகர் டெல்லியில் 351 பேருக்கும், ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |