இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் இருக்காது என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பயோ எத்தனால் எரிபொருள் தற்போது வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆழ்கிணறுகளில் கிடைக்கும் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்து கிலோ 70 ரூபாய் என விற்பனை செய்ய முடியும்.
அடுத்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் பெட்ரோல் இருக்காது. அதன் பிறகு நாடு முழுவதும் பெட்ரோல் தடை செய்யப்படும். விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் மின்சாரம் வழங்குபவர்கள் ஆகவும் இருக்க வேண்டும். அரிசி,கோதுமை மற்றும் சோளம் விளைவிப்பதால் மட்டும் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி விட முடியாது என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அடுத்த ஐந்து வருடங்களில் பெட்ரோலுக்கு தடை விதிக்கப்படும் என்று அமைச்சர் பேசி இருப்பது வாகன ஓட்டிகள் மத்தியில் பெருமகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.