Categories
உலக செய்திகள்

OMG : இந்தியா தான் காரணமா?…. வரலாறு காணாத சரிவு…. ரகசியம் உடைத்த மெட்டா….!!!!

“மெட்டா” என்று பெயரிடப்பட்டிருக்கும் முகநூல் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் 18 வருட காலத்தில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. கடந்த காலாண்டில் முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது பயனாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே மெட்டா, இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் செல்லிடப்பேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது தான் இந்த சரிவுக்கு காரணம் என்று கூறியுள்ளது. அதாவது இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் அனைத்தும் கடந்த டிசம்பர் மாதத்தில் செல்லிடப்பேசியின் ரீசார்ஜ் கட்டணத்தை 18 முதல் 25 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தது.

இதனால் தான் மெட்டாவின் லாபம் கடந்த டிசம்பர் மாதத்தில் 8 சதவீதம் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 76, 800 கோடியாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டில் மெட்டாவின் லாபம் ரூ.83, 700 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அதேபோல் ஆப்பிள் போன்களில் தனிநபர் விதிகளில் மாற்றம், போட்டி நிறுவனங்களில் பயனாளர்கள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் முகநூல் பயனாளர்களின் வருகை குறைந்துள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Categories

Tech |