Categories
உலக செய்திகள்

OMG: இனி தாடி வைத்திருந்தால் தான் அரசு அலுவலகங்களுக்குள் அனுமதி…. வெளியான புது ரூல்ஸ்….!!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சிப்பொறுப்பிற்கு வந்தது முதல் தலிபான்கள் பொது மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஆண் நபரின் துணை இல்லாமல் பெண்கள் விமானப்பயணம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இப்போது அரசுத்துறை பணியாளர்களுக்கான புதிய நிபந்தனை ஒன்றை தலிபான்கள் விதித்து இருக்கின்றனர். அதாவது அரசு பணியாளர்கள் தாடி வைத்து இருந்தால் மட்டுமே அலுவலகங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.

இதனையடுத்து அமைச்சரவை அலுவலகத்துக்குள் தாடி வைக்காமல் சென்ற அரசு பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த நிபந்தனைக்கு தலிபான் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் தாடி வளர்க்க வேண்டும் என இஸ்லாம் ஒரு போதும் மக்களை வற்புறுத்தியது இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |