உலகத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய உடலை புதைத்து விடுவோம் இல்லையென்றால் எரித்து விடுவோம். ஆனால் இந்தோனேஷியாவில் உள்ள ஒரு தீவில் வசிக்கும் மக்கள் இறந்தவர்களின் உடலை புதைக்காமல் அதற்கு பதிலாக அவர்களுக்கு புத்தாடைகள் அணிவித்து வருடத்திற்கு 12 நாட்கள் சடங்கு செய்வார்கள். அதாவது அவர்கள் இறந்தவர்களின் உடலை புதைக்காமல் ஒரு குகையில் வைத்துவிடுவார்கள்.
அதன்பிறகு வருடத்திற்கு ஒருமுறை அவர்களின் உடலை வெளியில் எடுத்து புத்தாடை அணிவித்து 12 நாட்கள் சடங்கு செய்வார்கள். அந்த 12 நாட்கள் சடங்கு முடிவடைந்தவுடன் மீண்டும் அவர்களின் உடலை அதே குகையில் வைத்து விடுவார்கள். மேலும் இறந்தவர்களுக்கு மறுஜென்மம் இருப்பதால்தான் வருடத்திற்கு ஒருமுறை இறந்தவர்களின் – உடல்களை எடுத்து சடங்கு செய்வதாக கூறுகின்றனர்.