Categories
உலக செய்திகள்

OMG….! உக்ரைனுக்குக் இவ்வளவு கோடி இழப்பா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உக்ரைனில் உள்கட்டமைப்புக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பில் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சராக அலெக்சாண்டர் குப்ராகோவ் கூறுகையில். “ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கெடுக்கப்பட்டதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்தில் பெரும்பாலான சேதம் அடைந்த கட்டடங்களை சரி செய்யப்படும், மேலும் அதற்கு அதிக அளவில் சேதம் இருந்தால் இரண்டு ஆண்டுகளில் சரி செய்யப்படும். இந்த நிலையில் 40 ஆயிரம் பேர் கார்கிவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறினர். மேலும் மற்ற நகரங்களை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று ரஷ்யாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் 40 ஆயிரம் பொதுமக்கள் தலைநகர் கீவ் புறநகரில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா மனிதாபிமான உதவிகளை தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது என்றும் உக்ரைன் உள்துறை அமைச்சக அதிகாரி வாடிம் டெனிசென்கோ கூறியுள்ளார்.

Categories

Tech |