உக்ரைனில் இருந்து போர் காரணமாக தப்பி வரும் இளம்பெண் அகதிகளை தவறான விடயங்களுக்காக பயன்படுத்தும் ஒரு அபாயம் பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள திட்டத்தில் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உக்ரைனில் இருந்து வரும் அகதிகளுக்கு பிரித்தானியர்கள் தங்களது வீட்டில் இடம் அளிக்கும் அடிப்படையில் பிரித்தானியாஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதற்கிடையில் இளம் உக்ரைன் பெண் அகதிகளுக்குத் தங்களது வீடுகளில் இடம் அளிக்க தனிமையாக இருக்கும் திருமணம் ஆகாத மற்றும் நடுத்தர வயது ஆண்கள் பெரும்பாலானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர் உக்ரைனில் இருந்து வரும் அகதிகளை வரவேற்க நல்ல மனதுடன் அத்திட்டத்தில் கலந்துகொண்டாலும், சிலர் அதைத் தவறாக பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்வது தெரியவந்துள்ளது. எடுத்துக்காட்டாக அவரை ஒரு மருத்துவர் என்று சொல்லிக்கொள்ளும் பிரித்தானியர் ஒருவர் தனக்கு பெரிய வீடு உள்ளதாகவும், இளம்பெண் அகதிகளுக்கு தங்கஇடமும், ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையும் கொடுக்கதான் முன்வந்துள்ளதாகவும் கூறுகிறார்.
இதனால் பதிலுக்கு அந்த இளம்பெண்அகதிகள் அவருடன் பாலுறவு கொள்ளவேண்டும் எனவும் மறைமுகமாக கேட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல ஆண்கள் அழகான இளம்பெண் அகதிகளை ஒன்லைனில் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் Olena (25) எனும் உக்ரைனிய இளம்பெண் அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஆவர். அவருக்கு தங்களது வீட்டில் இடமளிக்க விரும்புவதாக பலர் தெரிவிக்க அவரோ, தனக்கு இடம் கிடைத்துவிட்டதாகத் தெரிவித்தும், அவர் யார் வீட்டில் தங்கி இருக்கிறார் என்பதை தெரிவிக்குமாறு பலர் இன்னமும் அவரை வற்புறுத்தி வருகிறார்கள்.
ஆகவே பிரித்தானியா அறிமுகம் செய்துள்ள இத்திட்டம் ஜோடி தேடும் ஆண்களுக்கு உதவும் ஒரு தளமாகிவிடும் அபாயம் இருக்கிறது என்று தொண்டு நிறுவனத்தினர் எச்சரிக்கிறார்கள். அத்துடன் பாலியல் கடத்தல்காரர்களிடம் அந்த அப்பாவிப் பெண்கள் சிக்கிக் தவிக்கும் அபாயம் இருக்கிறது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனினும் அந்த அகதிகள் யார் வீட்டில் தங்கப்போகிறார்கள் என்பதை நேராக சென்று பார்த்து, அங்கு யாரெல்லாம் இருக்கிறார்கள், அகதிகளுக்கு அங்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை உறுதிசெய்த பின்பே உக்ரைனியர்களுக்கு விசா கொடுக்க உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.