பிரபல நாட்டில் இடிபாடுகளில் சிக்கி இருந்த குழந்தையின் சடலத்தை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைனில் உள்ள கார்கிவ் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி ரஷியா சுமார் 70 ஏவுகணைகளை வீசியது. அதில் 60 ஏவுகணைகளை வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்துவிட்டது. மீதமுள்ள ஏவுகணைகள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றை தரைமட்டமாகியுள்ளது.
இதில் ஏராளமான மக்கள் வசித்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகள் அனுமதித்தனர். ஆனாலும் இரவு முழுவதும் மீட்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று காலை இடிபாடுகளில் சிக்கி இருந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை பிணமாக மீட்டுள்ளனர்.