Categories
உலக செய்திகள்

OMG: உறுப்புத் திருட்டில் ஈடுபடும் பிரபல நாடு…? இத்தாலிய பத்திரிகை குற்றச்சாட்டால் பரபரப்பு…!!!!!!

இத்தாலி நாட்டிலிருந்து வெளிவரும் வாராந்திர பத்திரிக்கை பனோரமாவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியான கட்டுரை ஒன்றில் விரைவான தொழில்துறை முறையில் உறுப்பு திருட்டுத்தனத்தில் காண்டுமிராண்டித்தன நடைமுறையை சீனா மேற்கொண்டு இருக்கிறது என கூறப்பட்டுள்ளது. இதற்கு இத்தாலியில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் வலைத்தளம் ஒன்றின் வழியே பதில் அளித்திருந்தது. அதாவது கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த பதிவில் அவதூறு மற்றும் விஷயங்களை சரியாக கவனிக்காமல் தகவல்களை வெளியிடும் நோக்கத்தில் செயல்படுகிறது என பனோரமா மீது குற்றச்சாட்டு கூறியது மட்டுமல்லாமல் கட்டுரைக்கு கடுமையான கண்டனமும் தெரிவித்துள்ளது. அந்த செய்தியில் சட்ட விதிகளின் அடிப்படையில் செயல்படும் நாடு சீனா. மேலும் மனித உறுப்புகளை விற்பதற்கும் சட்டவிரோத உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கும் சீனா சட்டங்கள் தடை விதித்து இருக்கிறது.

இந்த நிலையில் சீனாவில் அனைத்து அறுவை சிகிச்சை நடைமுறைகளும் தன்னிச்சையாக உறுப்புகளை நன்கொடையாக வழங்குபவர்களிடமிருந்தே பெறப்பட்டு நடத்தப்படுகிறது என தெரிவித்திருக்கிறது. மேலும் கட்டாயப்படுத்தி மனித உறுப்புகள் அறுவடை செய்யப்படுகின்றதா என்பது ஒரு புரளி அது சீனா மீது அச்சத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது வெறுப்பு ஏற்படுத்துவதற்காக சீனாவிற்கு எதிரான சக்திகளால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக புனையப்பட்ட விஷயங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் ஏமாற்றம் செயல் எனக் கூறியுள்ளது. இருப்பினும் இதற்கு பானோரமா செய்தி நிறுவனம் பதிலடியாக மனித உறுப்புகள் திருடப்படுவது பற்றிய செய்திகள் மருத்துவ இதழ்களில் வெளியான தகவல்களை இதே துறையில் உள்ள பல்வேறு நிபுணர்கள் ஆராய்ச்சி மற்றும் மறு ஆய்வு செய்வதன் அடிப்படையில் வெளியான தரவுகளை ஆவணங்களாக இருக்கிறோம் என தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |