Categories
சினிமா தமிழ் சினிமா

OMG ….! ‘என்ன ஆச்சி பிரியங்காவுக்கு’?…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர் .

பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்து கொண்டார். இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை ஒன்றை பெற்றெடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா ‘ஷாப்பிங்’ செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் எடுப்பான உடல்வாகு கொண்ட பிரியங்கா தற்போது உடல் எடை கூடி குண்டாகி மாறியுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ‘என்ன ஆச்சி பிரியங்காவுக்கு? என்று கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ‘வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாலும் பிரியங்காவும் அம்மா தானே எனவேதான் இந்த மாற்றம்’ என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |