விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் ராஜு. இவர் தற்போது ராஜூ வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைபவ், விஜி, நிதின் சத்யா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராஜு கோவா படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, உங்க படத்த நம்பி போனா அங்க ஒரே கிராமம் கிளவி மட்டும்தான் இருக்காங்க எங்க சார் படத்த எடுத்தீங்க என்று கேட்டார்.
அதற்கு வெங்கட் பிரபு இந்தியாவிலும் இப்படி ஒரு இடம் இருக்கு என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக கொஞ்சம் மிகைப்படுத்தி எடுத்தோம். ஆனால் கோவா படம் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டது என்றார். அதன் பிறகு ராஜு கோவா படத்தை பாத்துட்டு அங்க போனா கொஞ்ச நாள்ல சாகப் போறா வெளிநாட்டவர்கள் கடலில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
அங்க போய் ஏமாந்து போன கூட்டத்துல நானும் ஒருத்தன் என்றார். அதற்கு வெங்கட் பிரபு நிறைய பேர் அங்கு போய் ஏமாந்து போயிருக்காங்க. அதனால என்ன அசிங்க அசிங்கமா கூட திட்டி இருக்காங்க. யோவ் எங்கய்யா கோவா படத்தை எடுத்த. உன்ன நம்பி நாங்க போனா அங்க ஒண்ணுமே இல்லையே. மெரினா பீச் மாதிரி தான் இருக்குது அப்படின்னு சொன்னாங்க என்றார்.
Heheehehe friends oda enga ponnalum adhu fun thaaney!! https://t.co/mEPLL47aNp
— venkat prabhu (@vp_offl) September 18, 2022