ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் அதிரடி ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.
அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை வழங்கி வருகிறது. அதனால் ஜியோ சிம் கார்டு அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது ஜியோ சிம் கார்டுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் முண்டியடித்து கொண்டு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் ரூ.249-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு, 100 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் அரசு நிறுவனத்தில் பணியாற்றும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 60 நாட்கள் செல்லுபடியாகும். தினசரி 2 ஜிபி தரவு திட்டத்திற்கு ஏர்டெல் ரூ.499, vi ரூ.555, ஜியோ ரூ.444 வசூலிக்கிறது.