வடகொரியா முன்பு இல்லாத அளவிற்கு தற்போது ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தற்போது தென் கொரியா அமெரிக்கா மற்றும் கடற்படைகளுடன் சேர்ந்து தொடர்ந்து கூட்டு போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரண்டு புதிய பிளாஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவி பரிசோதனை செய்தது என ஜப்பானின் கடலோர காவல் படைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இரண்டு பிளாஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு வெளியே விழுந்துள்ளது.
இந்நிலையில் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் அனு சோதனை நடத்த தயாராகி வருகிறார். மேலும் தென்கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு அவர் பல மாதங்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறார். இந்நிலையில் வடகொரியா முன்பு இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.