Categories
தேசிய செய்திகள்

OMG: ஒருத்தரையும் விடல…. மகன்-மருமகள், பேத்திகளை உயிரோடு எரித்த அரக்கன்…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  தொடுபுழா அருகேயுள்ள சீணிக்குழி பகுதியில் முகமது பைசல்-ஷீபா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மெஹ்ரா (19), அஸ்னா, (14) என்ற 2  மகள்கள் இருந்தனர். இதில் முகமது பைசலுக்கும் அவரது தந்தை ஹமீது (79) என்பவருக்கும் இடையே கடந்த 3 வருடங்களாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தந்தை மகனுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக கோபமடைந்த தந்தை ஹமீது மகனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். அதன்படி முகமதுபைசல் தன் குடும்பத்தினருடன் உறங்கி கொண்டிருந்தபோது தந்தை ஹமீது வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டியுள்ளார்.
இதையடுத்து ஹமீது தான் வைத்திருந்த பெட்ரோலை வீட்டின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தி உள்ளார்.  இதனால் வீட்டுக்குள் இருந்த பைசல் குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்து தங்களை காப்பாற்றுங்கள் என்று சத்தமிட்டனர். ஆனால் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் பைசல் இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் தீயில் கருகி பரிதகமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்து உயிரிழந்த 4 பேரின் சடலத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் பைசலின் தந்தை ஹமீதை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  அதன்பின் இது தொடர்பாக காவல்துறையினர் கூறியபோது, வீட்டுக்கு தீ வைப்பதற்கு முன் அப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் உள்ள தண்ணீரை ஹமீது திறந்து விட்டுள்ளார். இதன் காரணமாக அருகே இருப்பவர்களால் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து முகமது பைசல் தன் குடும்பத்தினருடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது பைசலின் தந்தை ஹமீதை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.

Categories

Tech |