உலகம் முழுவதும் ஏப்ரல் 29ஆம் தேதி பப்ஜி லைட் செயல்படாது பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி சிலர் உயிரை பறிகொடுத்துள்ளனர். அவ்வாறு ஆன்லைன் விளையாட்டுகளில் அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்த விளையாட்டு பப்ஜி.
கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பப்ஜி லைட், உலகம் முழுவதும் ஏப்ரல் 29ஆம் தேதி செயல்படாது பப்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம், “சில தவிர்க்க முடியாத காரணங்களால் பப்ஜி லைட் கேம் ஏப்ரல் 29ஆம் தேதி செயல்படாது. அதற்காக நாங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஆனால் பப்ஜி லைட் ஃபேஸ்புக் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்” என தெரிவித்துள்ளது.