ரஷ்யா-உக்ரைன் இடையே போர் ஏற்படும் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 8 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருள்களின் விலையை அந்நாட்டு அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.12.3, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.9.53, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை ரூ.10.08 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற 28-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.