பிரிட்டனில் கொரோனாவால் தற்போது 97 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி பிரிட்டனில் கொரோனாவால் புதிதாக 1,41,472 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் நேற்று முன்தினம் ( 1,51,663 பேர் பாதிப்பு ) இருந்ததை விட கொரோனா பாதிப்பு நேற்று 6.7 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேசமயம் பிரிட்டனில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 32.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே ஜனவரி இரண்டாம் தேதி அன்று கொரோனாவால் 73 பேர் பலியான நிலையில் தற்போது 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.