ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய நாடு நேற்று கொரோனாவால் மிகப்பெரிய பலி எண்ணிக்கையை சந்தித்துள்ளது. அந்த வகையில் நேற்று மட்டும் ஆஸ்திரேலியாவில் 80 பேர் கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகப்படியான பலி எண்ணிக்கை 78-ஆக இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய காலத்தில் பலி எண்ணிக்கை மூவாயிரத்துக்குள் தான் இருந்தது என்று கூறப்படுகிறது.