மொராக்காவில் உள்ள காசாபிளாங்காவில் ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் ஹலிமா சிஸ்சே என்ற பெண் ஒருவர் பிரசவம் ஆகி உள்ளார். கடந்த மே 4, 2021 அன்று சிசேரியன் மூலமாக இவருக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ளது. மாலியில் உள்ள மருத்துவர்கள் அவர் 7 குழந்தைகளை பெற்றெடுப்பார் என நம்பி உள்ளனர். அதனால் அந்த பெண்ணை மாலிய அரசாங்கம் மொராக்காவில் உள்ள ஒரு சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது.
அதில் இவருக்கு 5 பெண் குழந்தைகளும், 4 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் 0.5 – 1 கிலோ வரை எடையுள்ளதாக இருந்தது. ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுக்க போவது பற்றி அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. இந்நிலையில் கின்னஸ் உலக சாதனைகள் தாங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணைப் பற்றிய பதிவை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இருப்பதை காட்டும் வீடியோ இடம் பெற்றுள்ளது.