Categories
தேசிய செய்திகள்

OMG: ஓடும் காரில் பாலியல் வன்கொடுமை… தூக்கி வீசப்பட்ட 10 மாத குழந்தை பலி… பெரும் சோகம்….!!!!!!

ஓடும் காரில் இருந்து வீசிய  குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலத்தில் உள்ள பெல்ஹர்  பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் நேற்று போஷ்ரி பகுதிக்கு செல்வதற்காக கார் ஒன்றை புக் செய்துள்ளார். அதேபோல் காரும் அந்த பெண் கூறிய இடத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண் தனது 10 மாத குழந்தையுடன் காரில் ஏறி பயணத்துள்ளார். ஆனால் அந்த காரில் வேறு சில வாலிபர்களும்  இருந்துள்ளனர். இந்நிலையில்  கார் மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது  திடீரென கார் ஓட்டுநர் மற்றும் வாலிபர்கள் அந்த  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். ஆனால் அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அந்தப் பெண் மற்றும் அவரது 10 மாத குழந்தை 2  பேரையும் காரில் இருந்து வெளிய வீசியுள்ளனர். இதில் படுகாயமடைந்த  குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் காயமடைந்த பெண்ணை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |