ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் வீட்டில் திருடிய 2 பெண்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு வந்த 2 பெண்கள் தங்களை வீட்டு வேலைக்கு சேர்த்து கொள்ளுமாறு கூறியுள்ளனர். மேலும் உங்கள் வீட்டை சுத்தம் செய்து காட்டுகிறோம். பிறகு எங்களை வேலைக்கு சேர்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 30 நிமிடத்தில் வீட்டை கூட்டி சுத்தம் செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனால் அந்த அதிகாரியின் மனைவியான காந்திமதி என்பவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவனையடுத்த அவர் தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதிலிருந்து 87 கிராம் தங்க நகை காணாமல் போனது தெரிய வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.