பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். மேலும் அந்நாட்டில் உள்ள சில தீவுகளில் கடலுக்கு அடியிலும், நிலப்பரப்பின் மீதும் எரிமலைகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் டோங்கா தீவு நாட்டில் உள்ள ஹுங்கா டோங்கா என்ற தீவு பகுதியில் கடலுக்கு அடியில் திடீரென எரிமலை வெடித்து சிதறியது. அதனைத் தொடர்ந்து சுனாமி அலையும் கடலில் உருவானது.
பின்னர் அந்த தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. அதோடு மட்டுமில்லாமல் எரிமலை மீண்டும் வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.