Categories
தேசிய செய்திகள்

OMG: கடவுளின் அதிசய படைப்பு….. 2 தலை, 3 கைகளுடன் பிறந்த குழந்தை…..!!!!

மத்தியப் பிரதேசத்தின் ஜஓரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஹின் என்ற  இளம்பெண். இவருக்கு 2 தலைகள், 3 கைகளைக் கொண்ட குழந்தை பிறந்துள்ளது.  இவர் பிரசவத்திற்காக அங்குள்ள ரத்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஷாஹினின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது குழந்தையின் தாய், ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை மட்டும், இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து, அந்த குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.

இந்தச் சூழலில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. ஷாஹினுக்கு ஏற்கனவே கருத்தரிப்புக்கு பின் ஸ்கேன் செய்து பார்த்த போது, இரட்டை குழந்தைகள் பிறக்கும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

 

Categories

Tech |