Categories
அரசியல்

OMG: கவுன்சிலர்கள் கடத்தல்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

கடந்த மாதம் 19-ஆம் தேதி மயிலாடுதுறை நகராட்சியில் 35 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை முடிந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ம.தி.மு.க., காங்கிரஸ் சார்பில் தலா ஒருவரும், பா.ம.க., சார்பில் 2 பேரும், அ.தி.மு.க. சார்பில் 7 பேரும், தி.மு.க. சார்பில் 24 பேரும் வெற்றி பெற்றனர். அதில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 35 பேருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையடுத்து நாளை மறுநாள் நகரசபைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளைக் கைப்பற்ற தி.மு.க.வினர் 2 அணிகளாக பிரிந்து தங்களுக்கு ஆதரவுகளை திரட்டி வருகின்றனர். இன்று பதவியேற்று வெளியே வந்த பெரும்பாலான தி.மு.க., நகர சபை உறுப்பினர்களையும், ஒருசில அ.தி.மு.க., நகரசபை உறுப்பினர்களையும் ஒரு பிரிவை சேர்ந்த தி.மு.க.வினர் தாங்கள் கொண்டுவந்த டெம்போ வேன்களில் அவசர அவசரமாக ஏற்றியுள்ளனர். அப்போது மற்றொரு பிரிவினர் தங்களுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்தனர்.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. சில கவுன்சிலர்களின் கையை பிடித்து இழுக்காத குறையாக திமுகவினர் வேனில் ஏற்ற முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மறுத்து வெளியேறி சென்றனர். ஒரு சிலர் சொகுசு வாகனத்தில் ஏறி சுற்றுலா செல்வது போல் டாடா காட்டிக் கொண்டு கையை அசைத்தபடி மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். இதனையடுத்து நகரசபை உறுப்பினர்கள் ஏறிய 2 ஏசி டெம்போ வேன்களும் சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் நகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பாக சூழல் காணப்பட்டுள்ளது.

Categories

Tech |