Categories
தேசிய செய்திகள்

OMG!… கிளம்பிருச்சு அடுத்த வைரஸ்… பீதியை கிளப்பும் செய்தி…!!!

நாட்டில் புதிதாக நாய்களை கொல்லும் மிகக் கொடிய வைரஸ் பரவ தொடங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கு மத்தியில் பறவை காய்ச்சல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவத்தொடங்கியது.

இந்த பாதிப்புகளிலிருந்து இன்னும் மக்கள் மீண்டு வராத நிலையில், தற்போது புதிதாக பர்வோ வைரஸ் எனப்படும் கொடிய உயிர்க்கொல்லி வைரஸ் ஒன்று நாய்களுக்கு பரவ தொடங்கியுள்ளது. அந்தக் கொடிய வைரசால் இதுவரை 8 நாய்கள் உயிரிழந்துள்ளன. இது உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பரவத் தொடங்கியது.

அவ்வாறு அந்த நோயால் பாதிக்கப்படும் நாய்கள் குடல் சிதைவடைந்து, ரத்த வாந்தி எடுத்து இறந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி இது வேகமாக பரவக்கூடிய வைரஸ் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால் பாதிக்கப்பட்ட நாய்கள் உடனே இறந்துவிடும் அபாயம் அதிகம் உள்ளது. இது மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |