ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள பெனாமலூரில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் நேற்று பெனாமலூர் காவல் நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி பணிபுரிந்து வந்த என்னை அடையாளம் தெரியாத 4 பேர் சாலையில் நடந்து சென்ற போது வழிமறித்ததாகவும், அதன் பின் அதே பகுதியில் உள்ள அறையில் பூட்டி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறியுள்ளார்.
அது மட்டும் அல்லாமல் மூன்று நாட்களாக மது போதையில் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிந்த போலீசார் அந்த பெண்ணை விஜயவாடா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து அந்த புகாரின் பேரில் அவர் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு சென்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.