ஜிம்பாப்வேயில் கடந்த 2020 ஆண்டிலிருந்தே நடைமுறையிலிருக்கும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளாலும், வறுமை உட்பட பல முக்கிய காரணங்களாலும் பள்ளி குழந்தைகள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகார துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக ஜிம்பாப்வே திகழ்கிறது. இந்த ஜிம்பாப்வே நாட்டினுடைய பெண்கள் விவகார துறை அமைச்சரான சாய் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்காக அந்நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போடப்பட்ட மிகக் கடுமையான கட்டுப்பாடுகளால் பள்ளிகள் எப்போவாவது மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவிகள் மத்தியில் வறுமை, கலாச்சாரம் உட்பட பல முக்கிய காரணங்களால் கருவுறுதல் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகார துறை அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் கடந்தாண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 5000 பள்ளி சிறுமிகள் கருவுற்று உள்ளதாகவும் அவர் மிகுந்த கவலையுடன் தெரிவித்துள்ளார்.