Categories
தேசிய செய்திகள்

OMG! கொரோனாவால் நிதி பிரச்சினை…. கிட்னியை விற்கும் மக்கள்…. பெரும் அதிர்ச்சி தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இருந்தாலும் மக்களுக்கு சில நிவாரண உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் கொரோனாவால் ஏற்பட்ட நிதி பிரச்சினையை சமாளிக்க கிட்னியை விற்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களுடைய கிட்னியை விற்றுள்ளதாகவும், கிட்னி ரூ.5 லட்சத்துக்கு விலை பேசப்பட்டு, ரூ.2.5 லட்சம் மட்டுமே தரப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கிட்னி விற்பனையில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |