Categories
உலக செய்திகள்

OMG: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.

சீனா நாட்டில் உள்ள வுகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இந்த தொற்று  பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்காக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அவை மக்களுக்கு மூன்று தவணைகளில் செலுத்தப்படுகிறது. ஆனால் தற்போதும் இதன் பாதிப்பு 228 நாடுகள் மற்றும்  பிரதேசங்களில் உள்ளது.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 65. 35 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 618,970,064 ஆக  உள்ளது. அதில் 598, 918, 451 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 40, 221 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |