பூஜா ஹெக்டே பெற்றோரோடு மும்பையில் வசிக்கிறார். படப்பிடிப்பிற்காக சென்னை அல்லது ஐதராபாத் வரும் போது தன்னுடன் அலங்கார நிபுணர் ஆடை, வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 2 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்கான அனாவசியமான செலவுகளை செய்யக்கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம்.
இதனையடுத்து படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்த போது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு நிறுவனத்தின் பணத்தை பூஜாவிற்கு செலவு செய்தது தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே உதவியாளர்களுக்கான ஹோட்டல் சாப்பாடு உள்ளிட்ட செலவு பில்களை பூஜாவுக்கு அனுப்பி அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூஜா பணத்தை கட்ட தயாராகி வருவதாகவும் திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது