மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை கல்யாணி குராலே ஜாதவ் நேற்று மாலை வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் சாங்லி – கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே வந்தபோது அவரது பைக் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் படுகாயம் அடைந்த கல்யாணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.