Categories
தேசிய செய்திகள்

OMG: சிறுநீர் கழித்து கழித்து…. ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி….. கோடரியால் வெட்டி எடுத்த கொடூரம்….!!!!

மத்தியபிரதேசத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்து அடிவயிறு வலிப்பதால் முதியவர் ஒருவர் தன்னுடைய ஆணுறுப்பை கோடாரியால் வெட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம், தமோஹ் மாவட்டத்தில் உள்ள மெஹ்ரோன் என்ற இடத்தில் வசிப்பவர் நித்தியானந்த் திவாரி (75). இவருக்கு கடந்த சில மாதங்களாக சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதோடு அவரின் ஆணுறுப்பிலும் கடுமையான வலி இருந்து வந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் சிறுநீர் கழிப்பது என்பது திவாரிக்கு நரக வேதனையாக இருந்தது.

இதற்காக எடுத்துகொண்ட சிகிச்சைகளும் பலனலிக்கவில்லை. சம்பவத்தன்றும் வழக்கம் போல் சிறுநீர் கழித்தபோது கடுமையான வலி ஏற்பட்டது. உடனே வீட்டிற்குள் சென்ற திவாரி அங்கு இருந்த கோடரியை எடுத்து வந்து தன்னுடைய ஆணுறுப்பை வெட்டி எடுத்துவிட்டார். இதையடுத்து ரத்தப்போக்கு அதிகமாக வலியால் கத்தியுள்ளார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வெட்டிய ஆணுறுப்பை இணைக்க முடியாது என தெரிவித்தனர்.

Categories

Tech |