Categories
தேசிய செய்திகள்

OMG: சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு…. காரணம் என்ன தெரியுமா…???

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நெருக்கடி உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. இதனால் இந்தியா சூரியகாந்தி எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாக வர்த்தகர்கள் மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு கருங்கடல் பகுதியில் இருந்து சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் ஹோல்டர்களில் சிக்கியுள்ளது. மேலும் ரஷ்யா ஆக்கிரமிப்பு படைகள் தொடர்ந்து உக்ரைனில்  துறைமுகங்கள் மூடப்பட்ட பின்னர் புதிய கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் நான்கு விநியோகஸ்தர்களை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டு காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூரியகாந்தி எண்ணெய்க்கு பதிலாக சோயாபீன் எண்ணெய் மற்றும் பாமாயில் ஆகியவற்றை வாங்க இந்திய நுகர்வோரை ஊக்குவிப்பதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உலகிலேயே இந்தியா தான் அதிக அளவு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகும். இதனால் கருங்கடல் பகுதியில் குமார் 510,000 டன் என்ற கணக்கில் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதிக்காக இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இதுவரை பிப்ரவரியில் 130,000டன்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியா பாமாயில் வாங்கினாலும், சோயாபீன் எண்ணெய், அர்ஜென்டினா மற்றும் பிரேசிலில் இருந்து பெறும் நிலையில், சூரியகாந்தி எண்ணெயை ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் அடுத்த சில வாரங்களில் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்படவில்லை என்றால்,  இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் பற்றாக்குறை ஏற்படும் என்று சன்வின் குழுமத்தின் தலைமை நிர்வாகி சந்தீப் பெஜோரியா கூறியுள்ளார்.

Categories

Tech |