Categories
சினிமா தமிழ் சினிமா

“OMG” செல்வராகவனிடம் கறாராக பேசிய தனுஷ்….! எதுக்கு?…. என்ன நடந்தது?…. நீங்களே பாருங்க….!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாரித்து வரும் திரைப்படத்தின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பின் பொழுது தனுஷ் கறாராக பேசியுள்ளார். 

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்குனர்  செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேலும் அவருக்கு ஜோடியாக  இந்துஜா ரவிசந்திரன், சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரித்த இப்படதில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருக்கின்றனர். இதனை தொடர்ந்து தனுஷ் தன் அண்ணன் செல்வராகவன் இடமே கறாராக பேசி உள்ளார். ஏனென்றால் செல்வராகவன் நானே வருவேன் படத்திற்கான ஸ்கிரிப்டை நடிகர் தனுஷ் இடம் முழுமையாக தரவில்லை. அதற்கு பிறகு அவர் முழு ஸ்கிரிப்டையும் வேண்டும் என்று சண்டை போட்டு வாங்கி படித்த பின்பு தான் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ‘வாந்தி’ படத்தில் பிசியாக உள்ளதால், அதன் பிறகுதான் இந்த படத்தில் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு கட்டமாகவே நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் கம்போசிங் வேலை முடிவடைந்துள்ளது. மேலும் யாமினி யாக்னமூர்த்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Categories

Tech |