சத்தீஷ்கர் மகேந்திரகார் மாவட்டத்தில் சிப்சிப்பி கிராமத்தில் சுகாதார மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பெண் செவிலியர் ஒருவர் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் தனியாக பணியில் இருந்துள்ளார். இதை கவனித்த 17 வயது மைனர் சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சுகாதார மையத்துக்குள் புகுந்து செவிலியரை கட்டிப்போட்டுள்ளனர்.
மேலும் செவிலியர் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வீட்டுக்கு சென்ற செவிலியர், தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின் இது பற்றி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்து சத்தீஷ்காரில் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசை கண்டித்து பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது. அதனை தொடர்ந்து 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் அரசு உரிய பாதுகாப்பு அளிக்கா விட்டால், தொலைதூர உள்ளடங்கிய பகுதிகளில் பணிபுரிய மாட்டோம் என்று சுகாதார பணியாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல்துறையினர் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.