Categories
தேசிய செய்திகள்

OMG: ஜாமினில் வெளிவந்த பாலியல் குற்றவாளி…. மீண்டும் பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு….!!!!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் பதன் பகுதியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணை சென்ற 2020 ஆம் வருடம் அதே பகுதியை சேர்ந்த விவேக் பட்டேல் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து பெற்றோர் அளித்த புகாரின்படி கடந்த 2020ம் வருடம் விவேக்கை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையில் பாலியல் வன் கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவேக் சென்ற வருடம் ஜாமினில் வெளியே வந்தார். இந்த நிலையில் ஜாமினில் சிறையிலிருந்து வெளியேவந்த விவேக் 2 வருடங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த அதே இளம்பெண்ணின் வீட்டிற்குள் கடந்த மாதம் தன் நண்பனுடன் சென்றுள்ளார்.

அங்கு வீட்டில் தனியாக இருந்த அந்த இளம் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி தன் நண்பனுடன் சேர்ந்து விவேக் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த பாலியல் வன் கொடுமையை வீடியோவாக எடுத்த விவேக், தன் மீது கொடுத்த புகாரை திரும்பப்பெறும்படியும், இல்லையெனில் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன் எனவும் இளம்பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து நேற்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரை தொடர்ந்து இளம்பெண்ணை மீண்டும் கூட்டுபாலியல் வன் கொடுமை செய்துவிட்டு தலைமறைவாகவுள்ள குற்றவாளி விவேக் மற்றும் அவனது நண்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |